உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ட்ரான்ஸ்போர்ட்டரைப் போன்ற ரோடு
மூவிதான் விக்ரமுடன் தான் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள என்று சமந்தா ட்விட் செய்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட முதல்
ஷெட்யூல்ட் காட்சிகள் சில தினங்கள் முன்புதான் முடிந்தது. இரண்டாவது ஷெட்யூல்டில்
விரைவில் ஆரம்பிக்கிறது.
விக்ரம், சமந்தா,
பசுபதி நடிக்கும் இந்தப் படத்தில் புதிதாக நடிகர் மனோபாலாவும்
இணைந்துள்ளார். விஜய் மில்டன் இயக்கத்தில் ஃபாக்ஸ் ஸ்டார் மற்றும் முருகதாஸ்
இணைந்து தயாரிக்கும் இப்படம்
அடுத்த வருட பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.