கணினி பயன்பாடும் கோப்பு முக்கியத்துவமும்

கம்ப்யூட்டர்களில் நாம் பயன்படுத்தும் பைல்களின் பெயர்கள் இரு பிரிவுகளாக அமைக்கப்படுகின்றன. முதல் பகுதி பைலுக்கான விளக்கம் தரும் வகையில் பெயரைக் கொண்டு இருக்கும். அடுத்த பகுதி பைல் எக்ஸ்டன்ஷன் பெயராக இருக்கும். எந்த சாப்ட்வேர் கொண்டு பைல் உருவாக்கப்பட்டது என்பதனை அது சுட்டிக் காட்டும். இரண்டு பிரிவுகளை முற்றுப் புள்ளி ஒன்று பிரித்து அமைக்கும். எடுத்துக்காட்டாக, July report.doc என்பது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வேர்ட் புரோகிராம் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பைல் ஆகும். .doc என்னும் துணைப் பெயரைக் கொண்டு இதனை நாம் அறிந்து கொள்கிறோம். இதே போல Umbrella.mp3 என்பது ஒரு மியூசிக் பைல். இதன் துணைப் பெயர் மூலம் இதனை மியூசிக் இயக்கும் எந்த புரோகிராமும் திறந்து இயக்கும் என்பதனை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

விண்டோஸ் சிஸ்டமானது, மாறா நிலையில், பைல்களை நிர்வகிப்பதை எளிமையாக்க, பைல் பெயரின் பின் பகுதியைக் காட்டுவதில்லை. இதில் இன்னும் ஒரு சிக்கல் உள்ளது. முற்றுப் புள்ளி பைலின் பெயரையும், வகையையும் பிரித்தாலும், பேரில் எத்தனை புள்ளிகளையும் வைத்துக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக July report.doc என்பதை July.report.doc என்றும் அமைத்துக் கொள்ளலாம். இதனை விண்டோஸ் காட்டும் போது July.report என்று மட்டுமே காட்டும்.
பைல் எக்ஸ்டன்ஷன்களை மாற்ற முடியாது. எடுத்துக்காட்டாக, July.report என்பதை July.report.doc என மாற்றினால், அது July.report. doc.doc என்றே இருக்கும். இனி, இவற்றின் பைல் எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்பட வேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். இங்கு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஆகிய சிஸ்டங்களில் பார்க்கலாம். இவை காட்டப்பட வேண்டும் என்றால், நாம் அதற்கேற்ற வகையில் சில அமைப்புவழிகளை மாற்ற வேண்டும்.
முதலில் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எப்படி அமைப்பது என்பதைக் காணலாம்.
1. முதலில் Windows Explorer ஐத் திறந்து கொள்ள வேண்டும். பின், இடது மேல்புறமாக Organize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து மெனுவில் Folder and search என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. இங்கு திறக்கப்படும் விண்டோவில், View என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். பின் கீழாகச் சென்று, ‘Hide file extensions for known file types’ என்று இருப்பதன் முன்னால் உள்ள சிறிய பெட்டியில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
அடுத்து விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டு வரும் வழிகள்:
1. முதலில் Windows Explorer (இங்கு இதன் பெயர் File Explorer) ஐத் திறந்து கொள்ள வேண்டும். இங்கு View டேப் மீது கிளிக் செய்திடவும்.
2. அடுத்து, File name extensions என்று இருப்பதில் டிக் செய்திடவும். டிக் செய்யப்பட்டால், பைல் எக்ஸ்டன்ஷன்கள் காட்டப்படும். இது விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் இருப்பதற்கு நேர் மாறானது என்பதனை அறியலாம்.