தென் மேற்கு
சீனாவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் 150 பேர் பலியானதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டிட இடிபாடுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் காயமடைந்த
நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தென் மேற்கு
சீனாவிலுள்ள யுன்னன் மாகாணத்தின் வென்பிங் பகுதியில், இந்திய நேரப்படி
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி
இருந்தது அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த
நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 150 பேர் பலியானதாகவும், பலர்
காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்ததாக சீன அரசின் ஊடக நிறுவனம் செய்தி
வெளியிட்டுள்ளது.நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், மீட்புப் பணிகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.