பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பயிற்சியுடன் வேலை

 இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தில்  செயல்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள ஊக்கத்தொகையுடன் கூடிய உதவி அறிவியலாளர் பயிற்சி
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



விளம்பர எண்: KKNPP / HRM / 1 / 2014
பணி: Scientific Assistant
காலியிடங்கள்: 07
வயதுவரம்பு: 01.05.2014 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
மாத ஊக்கத்ததொகை: ரூ.9,000 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். பயிற்சிக்குப்பின் ரூ.9,300 - 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200 வீதம் மாத சம்பளம் வழங்கப்படும்.
பயிற்சி காலம்: 18 மாதங்கள்
கல்வித்தகுதி: இயற்பியலை முதன்மை பாடமாகக் கொண்டு வேதியியல், கணிதம், புள்ளியியல், பொருளாதாரம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் ஒன்றை துணைப்
பாடமாகக் கொண்டு வேதியில் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: குறைந்தபட்சம் 160 செ.மீ உயரமும், 45.5 கிலோ எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.npcil.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.03.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Manager(HRM),
Nuclear Power Corporation of Indian Limited, Kudankulam Nuclear Power Project, Kudankulam Po, Radhapuram Taluk,
Tirunelveli District, Tamilnadu - 627106.