யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சனை ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படும்
என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு
பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.), சிவில் சர்வீஸ் முதல்நிலை
தேர்வுகளில் திறனறி தேர்வு (சி.எஸ்.ஏ.டி.) ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
இந்த தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 24–ந் தேதி
நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்வு ஆங்கில மொழி
பேசுபவர்களுக்கு ஆதரவாக வைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் ஆங்கில புலமை குறைந்த
மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இந்த தேர்வை
ரத்து செய்ய வேண்டும் என்று நாடு முழுவதும் மாணவர்கள் கண்டன போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறும் சி.எஸ்.ஏ.டி. தேர்வை ஒத்தி வைக்குமாறு, யு.பி.எஸ்.சி.யை
மத்திய அரசு கேட்டுக்கொண்டது. மேலும் இது தொடர்பாக குழு ஒன்றை அமைத்த மத்திய அரசு, இந்த தேர்வில்
மொழி அடிப்படையில் எந்த பாகுபாடும் கிடையாது என்றும் அறிவித்தது.
இதனால் இதனால் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால்
அடுத்த மாதம்மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் அடுத்த மாதம் 24–ந் தேதி
நடைபெறும் சி.எஸ்.ஏ.டி. தேர்வுக்காக மாணவர்களுக்கு நேற்று முன்தினம்
நுழைவுச்சீட்டுகள் அனுப்பப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள்
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்றும் மாணவர்கள் டெல்லியில் உள்ள யு.பி.எஸ்.சி. தலைமை அலுவலகம்
முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர்
அலுவலக இணைமந்திரி ஜிதேந்திர சிங், ராஜ்நாத் சிங் மற்றும் அருண்
ஜெட்லி ஆகியோருடன் கலந்து ஆலோசனை நடத்தினார். தற்போது இதுகுறித்து பேசிய ராஜ்நாத்
சிங், யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சனை ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படும்
என்று தெரிவித்துள்ளார். மத்திய மந்திரி கட்காரி வீட்டில் உளவு பார்க்கும்
கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று வெளியாகிய தகவல்களை ராஜ்நாத் சிங்
நிராகரித்தார்.
யு.பி.எஸ்.சி. தேர்வு பிரச்சனை ஒரு வாரத்திற்குள் சரிசெய்யப்படும்
என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.
உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
(யு.பி.எஸ்.சி.), சிவில் சர்வீஸ்