வேர்டில் பின்னணி நிறத்தை மாற்ற வேண்டுமா?

சொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க: வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை அமைக்கையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களுக்குள், டாகுமெண்ட்டை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படும். பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள், மொழி பெயர்ப்பு ஆவணங்கள் போன்றவற்றில் இந்த கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதற்கென டாகுமெண்ட்டினை உருவாக்குகையில், பல நிலைகளில் மொத்த சொற்களின் எண்ணிக்கையினை, வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூல் மூலமாகப் பார்ப்போம். 

இதில் ஹைபன் என்னும் சொற்களுக்கு இடையேயான கோடுகளால், பிரச்னை ஏற்படும். இவற்றைத் தனிச் சொற்களாக எடுத்துக் கொண்டு இந்த டூல் செயல்படும். இவற்றை விலக்கி, சொற்களை எண்ண ஒரு சிறிய செட்டிங்ஸ் அமைக்க வேண்டும். அதனை இங்கு காணலாம்.
ஆங்கிலத்தில் கூட்டு சொற்கள் (compound words) மூன்று வகைப்படும். முடிக்கப்பட்ட கூட்டு (எ.கா. ‘firefly’), ஹைபன் அமைக்கப்பட்டது (எ.கா. ‘daughterinlaw’) மற்றும் மாற்றமில்லாமல் அமைவது (எ.கா. ‘post office’). இந்தக் கூட்டுச் சொற்களில், பொருள் மாறாமல் இருக்க ஹைபன் பயன்படுத்துகிறோம். எடுத்துக்காட்டாக old furniture shopஎன்பதில், கடை பழையதா, அங்கு விற்கப்படும் பொருட்கள் பழையனவா என்று சரியாகக் காட்ட வேண்டும். இதனை old furnitureshop மற்றும் old furniture shop எனவும் எழுதலாம். இது போன்ற சொற்களில், ஹைபன் ஒரு சொல்லாக எடுக்கப்பட்டு எண்ணப்படும். இதனைத் தவிர்க்க கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும்.
1. Edit மெனுவில் இருந்து Replace என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Ctrl+Hஅழுத்தவும். இப்போது வேர்ட், Find and Replace டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. அடுத்து More பட்டனில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Use Wildcards என்ற செக் பாக்ஸில் டிக் அடிக்கவும்.
4. இப்போது Find What என்ற பாக்ஸில் ([Az]{2,})([Az]{2,}) என என்டர் செய்திடவும்.
5. தொடர்ந்து Replace With பாக்ஸில் \1 \2 என அமைக்கவும். இதில் 1 என்பதற்குப் பின் அடுத்த ஸ்லாஷ் முன்பாக ஒரு ஸ்பேஸ் விடப்பட்டுள்ளது. இதனைச் சரியாக அமைக்கவும்.
6. இனி Replace All என்பதில் கிளிக் செய்திடவும். Find and Replace தொடர்ந்து டயலாக் பாக்ஸை மூடவும்.
இனி டூல்ஸ் மெனுவில், வேர்ட் கவுண்ட் (Word Count) என்ற டூலைத் தேர்ந்தெடுத்து அழுத்தி சொற்களின் எண்ணிக்கையைப் பெறவும். 
டாகுமெண்ட்டில் உள்ள ஹைபன்கள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டதே எனப் பதற்றம் அடைய வேண்டாம். பழைய ஹைபன்கள் கிடைக்கும் வரை கண்ட்ரோல் +இஸட் கீகளை அழுத்தவும். டாகுமெண்ட் பழைய நிலைக்குச் செல்லும்.
பின்னணி நிறத்தை மாற்றலாம்: வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி வைத்தும் இயக்கும் வகையில் இவ்வழி உள்ளது. முதலில் Start, All Programs, Microsoft Word வழியாக சென்று வேர்ட் பைல் ஒன்றைத் திறக்கவும். பின்னர் Toolsஎன்பதில் கிளிக் செய்திடவும். கீழாக விரியும் மெனுவில் Options என்னும் பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் விரியும் டயலாக் பாக்ஸில் General என்னும் டேபைத் தட்டி புதிய விண்டோ பெறவும். அதில் முதலாவதாக “Blue background, white text.” என்று இருக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கும் வகையில் அதன் முன் உள்ள கட்டத்தில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி வேர்ட் டாகுமென்ட் திறந்தால் அது நீலக் கலரில் வெள்ளை வண்ணத்தினாலான எழுத்துக்களைக் காட்டும்.