கடந்த சில வருடங்களில்
தமிழில் வெளிவந்த மிக முக்கியமான படங்களில் ஒன்று... பண்ணையாரும் பத்மினியும்.
குறும்படமாக எடுக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் வரவேற்பைப்பெற்ற கதை இது. அதை
முழுநீள திரைப்படமாக எடுக்கச் சொன்னதோடு தானே நடிக்க முன்வந்து கால்ஷீட்
கொடுத்தார் விஜய்சேதுபதி. எஸ்.யூ.அருண்குமார் இயக்கிய இப்படத்தில் விஜய்
சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்தார். முதிர்ந்த ஜோடியாக ஜெயபிரகாஷ் துளசி
நடித்திருந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஒரு கார்தான் மைய பாத்திரம்.
இப்படம் வெளியானபோது, விமர்சன ரீதியாக
பேசப்பட்டது. அதே சமயம் வணிகரீதியில் இப்படம் வெற்றியடையவில்லை.
இந்நிலையில், பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு புதிய கௌரவம் கிடைத்திருக்கிறது. கேரளாவில் விரைவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் உலக அளவிலான பல மொழிப் படங்கள் திரையிடப்படவிருக்கிறது. இந்த விழாவில் பண்ணையாரும் பத்மினியும் தமிழ் படமும் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படவிழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட ஒரே தமிழ்ப்படம் பண்ணையாரும் பத்மினியும் படம் மட்டுமே!

No comments:
Post a Comment