ஐ படம் எத்தனை மணி நேரம் தெரியுமா?















ஜனவரி 14  வெளியாகிறது. திரையுலகமும், பொதுமக்களும் ஆவலுடன் எதிர்பார்த்த படம். விக்ரமின் கடின உழைப்பும், ஷங்கரின் பிரமாண்ட கற்பனையும், ரஹ்மானின் இசையும், ஆஸ்கர் ரவிச்சந்திரனின் கோடிகளும் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
பொதுவாக இரண்டரை மணி நேரம் படம் இருந்தாலே பார்வையாளர்கள் நெடியத் தொடங்குவார்கள். இரண்டே முக்கால் மணி நேரம் என்பது மிக அதிகம். மூன்று மணி என்றால், பார்வையாளர்கள் திரையரங்கைவிட்டே ஓடிவிடுவார்கள். 

சரி, ஐ யின் ரன்னிங் டைம் தெரியுமா? மூன்று மணி எட்டு நிமிடங்கள்.

மேலே சொன்ன வரையறை எல்லாம் மற்றவர்களின் படங்களுக்குதான். ஒவ்வொரு பிரேமையும் இழைத்து செதுக்கியிருக்கும் ஷங்கர் படத்துக்கு பொருந்தாது. நான்கு மணிநேரம் என்றாலும் ஆணி அடித்த மாதிரி உட்கார்ந்து ரசிக்க  பார்வையாளர்கள் தயார்.

எனினும், படம் வெளியாகும் முன்பே கவனமாக பார்த்து தேவையற்ற ஐந்து நிமிடங்களை எடிட் செய்து மூன்று மணி மூன்று நிமிடங்கள் ஆக்கியிருக்கிறார்கள்.



No comments:

Post a Comment