TNPSC V.A.O தமிழ் இலக்கிய வரலாறு வினாவிடை PART 2

1.தொடக்க காலத் தமிழ் எழுத்துக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன.

தமிழி

2.மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.

மாங்குடிமருதனார்

3.தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.

திருக்கைலாய ஞான உலா

4.திருநெல்வேலி சரித்திரம் என்ற வரலாற்று நூலை எழுதியவர் யார்.

டாக்டர் கால்டுவெல்

5.நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?

நாற்கவிராசநம்பி

6.ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர்

மு.வரதராசன்

7.சிவந்தெழுந்த பல்லவன் உலா எழுதியவர் யார்

படிக்காசுப்புலவர்

8.காளமேகப்புலவரின் இயற்பெயர் என்ன

வரதர்

9.நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது

வெற்றிவெட்கை

10.மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன

வேதாசலம்.