TNPSC V.A.O தமிழ் இலக்கிய வரலாறு வினா விடை PART 1

1.பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை

2.பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார்

ஒளவையார்

3.ஒன்றேகுலம்; ஒருவனே தேவன் என்று பாடியவர் யார்

திருமூலர்

4.பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன

திருத்தொண்டர்புராணம்

5.புறப்பாட்டு எனப்பெயர் பெறும் நூல் எது

புறநானூறு

6.குறிஞ்சித்தேன் என்ற நாவலின் ஆசிரியர் யார்

ராஜம் கிருஷ்ணன்

7.காய்ச்சீர் எந்தப் பாவிற்கு உரியது

வெண்பாவிற்கு உரியது

8.மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை

வ.வே.சு.ஐயர்

9 .பாலங்கள் யார் எழுதிய நாவல்

சிவசங்கரி

10.கண்ணிரண்டும் விற்றுச்சித்திரம் வாங்கிடில் கைகொட்டிச்சிரியாரோ என்று பாடியவர் யார்

பாரதியார்