பின்னணி பாட்டு பாடும் மா.கா.பா.ஆனந்த்
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருபவர் மா.கா.பா.ஆனந்த். இவர் வானவராயன் வல்லவராயன்படத்தின் மூலம் பெரிய திரையில் நடிகராக அறிமுகமானார். அப்படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு பெரிய திரையில் நடிக்க வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இந்நிலையில், ‘மொக்கப்படம்என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகராகவும் வலம்வரத் தொடங்கியிருக்கிறார் மா.கா.பா.ஆனந்த். இப்படத்திற்கு வல்லவன் இசையமைக்கிறார். இவருடைய இசையில், லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்க என்ற பாடலை இவர் பாடியுள்ளார்.
இப்படத்தில் வீரசமர் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் காதல், வெயில் போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர். மேலும், ‘வீரசேகரன்என்ற படத்தில் அமலாபாலுக்கு கதாநாயகனாக நடித்தவர்.
நாயகியாக அமிர்தா நடிக்கிறார். நடிகர் ஸ்ரீமனின் தம்பி பிரபாகர் இப்படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகிபாபு, சேரன்ராஜ், முண்டாசுப்பட்டி சுப்ரமணி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தை டி.ஆர்.ஜெயந்திநாதன் இயக்கி வருகிறார். சந்திரா மீடியா விஷயன் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கிறார். விரைவில் படம் திரைக்கு வருகிறது.


No comments:

Post a Comment