சின்ன திரை நடிகர் தீபக் நாயகனாக நடிக்கும் தண்ணீல கண்டம்சின்ன திரை மூலம் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த தீபக் வெள்ளி திரையிலும் 'இவனுக்கு தண்ணீல கண்டம்' படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார். சக்தி வேல் இந்தப் படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
'பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம். அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை நாங்கள் நினைக்கவே இல்லை. இந்த படம் உலக வெப்பமயம் ஆவதையோ, தண்ணீர் பிரச்சனை பற்றியோ பேசவில்லை.
இது குடியின் தீமைகளை பற்றி விவாதிக்கும் பிரசார படமும் அல்ல. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு பார்ட்டி, அதன் பின்னோடியில் இருக்கும் மது கேளிக்கைகள், அதனால் வரும் விளைவுகள் ஆகியவற்றை மிகவும் ஜனரஞ்சகமாக நகைசுவையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி வேல். இந்த நகைச்சுவை ஒரு போதை போல, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.
நடிப்பு என்று வந்த பிறகு பெரிய வேடமோ, சின்ன வேடமோ ....சின்ன திரையோ, பெரிய திரையோ நான் அதைப் பற்றிக் கவலை படுவதே இல்லை. இந்த படத்தில் கூட நான் ஒரு சின்ன திரை தொகுப்பாளனாக தான் நடிக்கிறேன். அந்த பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பதால் மட்டுமே நான் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும். அதற்கு முக்கிய காரணம் நாங்கள் அவர்கள் வீட்டு பிள்ளையாக கருதப் படுவதுதான். இந்த வரவேற்பு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.


No comments:

Post a Comment