தனுஷ் - பாலாஜி மோகன் படப்பிடிப்பு தொடங்கியதுராதிகா தயாரிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.
'காதலில் சொதப்புவது எப்படி', 'வாயை மூடி பேசவும்' படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் அடுத்ததாக தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தை இயக்குவார் என்று செய்திகள் வெளியானது. யார் தயாரிப்பாளர் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், பாலாஜி மோகன் - தனுஷ் படத்தினை ராதிகா சரத்குமாரின் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. அனிருத் இசையமைக்க, காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதனை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.

இப்படம் குறித்து தனுஷ் குறிப்பிடும்போது, "பாலாஜி மோகன் இயக்கும் படம் இன்று தொடங்கியது. புதிய வேடம், புதிய அணி. சரத்குமார் மற்றும் ராதிகா மேடத்தின் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தலைப்பு விரைவில் அறிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment