கௌதம் மேனன் , ராம் சரண் தேஜா முதன்முறையாக இணையும் தமிழ் படம்

விஜய், அஜீத், விஷால், ரஜினி, கமல் நடித்த படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்புடன் ஓடுகின்றன. ஒருகாலத்தில் விஜயசாந்தி, சிரஞ்சீவி, டாக்டர் ராஜசேகர் நடித்தப் படங்களை திரையிடவும், முதல்நாளே அவற்றை பார்க்கவும் தமிழர்கள் துடித்தார்கள். இப்போது அந்தத் துடிப்பு அப்படியே ஆந்திராவுக்கு ஷிப்டாகியுள்ளது. 

மீண்டும் அந்தத் துடிப்பை தமிழகத்தில் ஏற்படுத்த தெலுங்கின் முன்னணி இளம் ஹீரோக்கள் விரும்புகிறார்கள். முக்கியமாக ராம் சரண் தேஜா, நாக சைதன்யா, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்றவர்கள். இதில் அல்லு அர்ஜுனுக்கு கேரளா இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

மேலே சொன்ன நட்சத்திரங்கள் தமிழில் அறிமுகமாக ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். முதல் வாய்ப்பு ராம் சரண் தேஜாவுக்கு தகைந்திருப்பதாக கேள்வி.

கௌதம் தற்போது இயக்கி வரும் என்னை அறிந்தால் படம் முடிந்ததும் ராம் சரண் தேஜா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகவுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.No comments:

Post a Comment