அஜித், விஜய் அடுத்த படங்கள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்புகத்தி படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் மாரீசன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் அதாவது நவம்பர் 10 ஆம் தேதி துவங்கவிருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால்... படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித், அடுத்ததாக வீரம் சிவாவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் அடுத்து அஜித்தும் விஜய்யும் யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்பதுதான் இப்போதைய கேள்வி!

மாரீசன் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த படத்தை அதாவது விஜய் 59 படத்தை இயக்குபவர் ராஜா ராணி புகழ் அட்லி. வரும் 9ஆம் தேதி தன் திருமணத்தை முடித்த சில நாட்களில் விஜய் 59 படவேலைகளை தொடங்குகிறார் அட்லி. விஜய் கதை இப்படி இருக்க, அஜித் கதை என்னவாம்? வீரம் சிவாவின் படத்தை அடுத்து அஜித்தை இயக்கப்போவது கே.வி.ஆன்ந்த் என்று உறுதியாக சொல்கிறார்கள். கௌதம் மேனன் படத்தில் அஜித் கமிட்டாவதற்கு முன்பே இந்த பேச்சு அடிபட்டது. ஆனால், அதன்பிறகு தனுஷை வைத்து அனேகன் படத்தில் பிஸியாகிவிட்டார் கே.வி.ஆனந்த். தற்போது, அனேகன் படம் முடிவும் தருவாயில் இருப்பதால் அஜித் - கே.வி.ஆனந்த் கூட்டணி இணைய இருப்பதாக சொல்கிறார்கள்.
தல 57 படத்திற்காக த்ரில்லர் கதை ஒன்றை கே.வி.ஆனந்த் சூப்பராக உருவாக்கி வைத்திருப்பதாகவும், அந்த கதையின் ஒன்லைன் அஜித்திற்குப் பிடித்துப்போனதால் உடனே கால்ஷீட் தர ஓ.கே. சொல்லிவிட்டதாகவும் கூறுகிறார்கள். அஜித், விஜய்யின் படங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. என்றாலும், இந்த இரண்டு படங்களும் கண்டிப்பாக 2015 மே மாதத்துக்குப் பிறகே சாத்தியம் என்கிறார்கள்.


No comments:

Post a Comment