என்னை அறிந்தால் படத்தின் டீசர் நவம்பர் 20 ஆம் தேதி ரிலீஸ்இந்த வருடம் வெளியாகும் படங்களில் அதிக எதிர்பார்ப்புக்குரிய படம்... கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால்... படம்தான். படத்தின் தலைப்பை சஸ்பென்ஸாக வைத்திருந்தவர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். தொடர்ந்து என்னை அறிந்தால் படத்தின் போஸ்டர்கள் தினம் ஒன்றாக வெளியாகி, அஜித் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. தங்களது சந்தோஷத்தின் வெளிப்பாடாக என்னை அறிந்தால்... படத்தலைப்பை டுவிட்டரில் உலகளவில் டிரென்ட் செய்தார்கள் தல ரசிகர்கள்.
என்னை அறிந்தால்... படத்தின் வேலைகள் திட்டமிட்டபடி சரியாக நடந்து வருவதால் ஏற்கெனவே கௌதம் வாசுதேவ் மேனன் அறிவித்தபடி, இந்த மாதத்தில் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட உள்ளனர். அதை வெளியிடுவதற்கு பரபரப்பாக ஆயத்தமாகி வருகிறது கௌதமின் டீம்! என்னை அறிந்தால் படத்தின் டீஸரை நவம்பர் 20 ஆம் தேதி வெளியிட உள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி வரும் பாடல்களை டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாகவும் தகவல்.
பொதுவாகவே அஜித் தன் படங்கள் சம்பந்தப்பட்ட எந்த விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார். என்னை அறிந்தால் படத்தின் இசைவெளியீட்டுவிழாவுக்கு அஜித் வர மாட்டார் என்பதால், என்னை அறிந்தால்... படத்தின் ஆடியோ வெளியீட்டை ஏதாவது ஒரு எஃப்.எம். ஸ்டேஷனில் வைக்கலாமா என யோசித்து வருகிறார்கள். அல்லது எவ்வித விழாவும் இல்லாமல் நேரடியாக கடைகளில் விற்பனைக்கு அனுப்பி வைக்கலாமா என்றும் பரிசீலித்து வருகிறார்கள். என்னை அறிந்தால்... படத்தை கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதியும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.


No comments:

Post a Comment