வேர்டில் டாகுமெண்ட் திருத்துவது எப்படி ?

டாகுமெண்ட் திருத்த முறை : ஒவ்வொரு முறை வேர்ட் டாகுமெண்ட்டைத் திருத்துகையில், அதன் ப்ராப்பர்ட்டீஸ் (document properties) அப்டேட் 
செய்யப்படுகிறது. ஒரு டாகுமெண்ட் எத்தனாவது முறையாகத் திருத்தப்பட்டது என்பது இந்த தகவல்களில் ஒன்று. இதனை the revision number என அழைக்கின்றனர். நீங்கள் விரும்பினால், இந்த எண்ணை, அதே டாகுமெண்ட்டில் அமைத்து, தானாகவே அப்டேட் செய்து காட்டுமாறு அமைக்கலாம்.

1. எங்கு இந்த எண் காட்டப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரை அமைக்கவும்.


2. ரிப்பனில், Insert டேப்பினைக் காட்டவும்.


3. இதில் உள்ள டெக்ஸ்ட் குரூப்பில் Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர் Field என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.


4. Categories பட்டியலில் இருந்து, Numbering என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field Names பட்டியலை அப்டேட் செய்கிறது. 


5. இந்த பட்டியலில் இருந்து RevNum என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.


6. அடுத்து ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடவும். இனி, டாகுமெண்ட் திருத்தப்படும் ஒவ்வொரு வேளையிலும், அதற்கான டாகுமெண்ட்டிலேயே, அப்டேட் செய்யப்படும்.


பாரா வடிவமைப்பை மற்றவற்றிற்கு அமைக்க : வேர்ட் தொகுப்பில் கூடுதல் பயன்களைத் தரும் ஒரு சாதனம் பார்மட் பெயிண்டர் என்னும் வசதி ஆகும். இதன் மூலம் ஒரு பாரா பார்மட்டினை இன்னொரு பாராவிற்கு மாற்றலாம். 


முதலில் எந்த பாராவின் பார்மட்டினைக் காப்பி செய்து இன்னொரு பாராவிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திடவும். பின் டூல் பாரில் பார்மட் பெயிண்டர் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் எந்த பாராவில் இந்த பார்மட்டினைச் செலுத்த வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதே பார்மட்டைத் தொடர்ந்து காப்பி 

செய்திட பார்மட் பெயிண்டரில் டபுள் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் பார்மட் பெயிண்டரை குளோஸ் செய்திடும் வரை இந்த பார்மட் தொடர்ந்து காப்பி ஆகும். குளோஸ் செய்திட பார்மட் பெயிண்டரில் இன்னொரு முறை கிளிக் செய்திட வேண்டும். அல்லது எஸ்கேப் கீயினை அழுத்த வேண்டும்.
வேர்ட் 2007 தொகுப்பில், பார்மட் பெயிண்டர் பெற, ஹோம் டேப்பில், கிளிப் போர்ட் பிரிவில், வலது மூலையில் இருக்கும் 

பார்மட் பெயிண்டர் சென்று, மேலே காட்டப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்படுத்தலாம். இந்த ஐகான், பெயிண்ட் பிரஷ் ஐகானாகக் கிடைக்கும். 

No comments:

Post a Comment