'போடா ஆண்டவனே நம்ம பக்கம்' - பட டைட்டில் இது              ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை படங்களை இயக்கிய ஆர்.கண்ணன், தற்போது ''ஒரு ஊர்ல ரெண்டு ராஜா'' படத்தை இயக்கி வருகிறார். விமல், சூரி, ப்ரியா ஆனந்த், விஷாகா நடித்திருக்கிறார்கள். யூ சான்றிதழுடன் படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அடுத்த மாதம் 7ந் தேதி ரிலீசாகிறது.
பொதுவாக ஒரு சொந்த கதைப் படம், ஒரு ரீமேக் படம் என மாறி மாறி இயக்கும் கண்ணன் இந்த முறை சேர்ந்தார்போல இரண்டு சொந்தக் கதைகளை இயக்குகிறார். தற்போது இயக்கி வரும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா அவரது சொந்தக் கதை. அடுத்து இயக்க இருக்கும் படமும் சொந்தக் கதை. இதற்கு முதலில் அலங்காரம் என்று பெயர் வைத்திருந்தார். தற்போது "போடா ஆண்டவனே நம்ம பக்கம்" என்று மாற்றி விட்டார். இது ''படையப்பா'' படத்தில் ரஜினி பேசும் பன்ஞ் டயலாக்.

"
இதுவும் காமெடி படம்தான். ஒரு தியேட்டரை மையமாக கொண்டு நடக்கும் காமெடி திரைக்கதை. நானே தயாரிக்கிறேன். முன்னணி நடிகர்களுடன் நடிக்க பேச்சு நடக்கிறது. படத்துக்காக பிரமாண்ட தியேட்டர் செட் அமைக்கப்படுகிறது. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படம் ரிலீசானதும், சிறிது இடைவெளிவிட்டு டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும்" என்கிறார் கண்ணன்.


No comments:

Post a Comment