மிஷ்கின் அடுத்த படம் "பிசாசு" பாலா தயாரிக்கிறார்.

இயக்குனர் பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ்தயாரிக்கும் புதிய படத்தை மிஷ்கின் இயக்குகிறார்.
இப்படத்திற்கு பிசாசுஎன பெயரிட்டிருக்கிறார்கள். படத்தின் தலைப்பே இது ஒரு அமானுஷ்ய படம் என்பதை புரிய வைத்து விடும்.

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்படத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தை மிஷ்கின் இயக்க உள்ளார்.
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்படங்களுக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் 7வது படம் இது.
படத்திற்கு இளையராஜா இசையமைக்க, நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இயக்குனர் பாலா அவருடைய பி ஸ்டுடியோஸ்சார்பாக சிங்கம் புலி இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா நடித்து 2003ம் ஆண்டில் வெளிவந்த  மாயாவிபடத்தையும், அவருடைய இயக்கத்தில் அதர்வா, வேதிகா நடித்து 2013ம் ஆண்டில் வெளிவந்த பரதேசிபடத்தையும் இதற்கு முன் தயாரித்திருந்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும்படத்தைப் பார்த்து மிஷ்கினை வெகுவாகப் பாராட்டியவர் பாலா. அப்போதே இருவரும் விரைவில் இணைந்து ஒரு படத்தைத் தருவார்கள் என்ற பேச்சு எழுந்தது. அது இப்போது செயல் வடிவம் பெற்றுள்ளது.
பிசாசுபடம் மே 14ம் தேதி ஆரம்பமாகி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.