மீண்டும் தனுஷுடன் இணையும் வெற்றி கூட்டணி

இந்த வருடம் வெளியான படங்களிலேயே உண்மையான வெற்றியையும் வசூலையும் அறுவடை செய்தது தனுஷ் நடித்து, தயாரித்த வேலையில்லா பட்டதாரி படம்தான்.
தனுஷின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் இப்படத்தை இயக்கி இருந்தார். ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக களமிறங்கியவர்களில் முதல் படத்திலேயே சூப்பர்ஹிட் வெற்றியைச் சுவைத்தவர் வேல்ராஜ்தான் என்று சொல்லுமளவுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது வேலையில்லா பட்டதாரி படம். படம் வெளி வருவதற்கு முன்பே இப்படத்தின் பாடல்களும் பெரிய வெற்றியைப் பெற்றன.
தனுஷிற்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய வேலையில்லா பட்டதாரி கூட்டணி மீண்டும் தற்போது ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவிருக்கிறது. இயக்குநர் வேல்ராஜ் அண்மையில் தனுஷை சந்தித்து அவரிடம் கூறிய ஒன்லைன் ஸ்டோரி தனுஷிற்கு மிகவும் பிடித்துவிட்டதாம். எனவே உடனே நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷ், அந்த லைனை உடனடியாய் டெவலப் பண்ணி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணும்படி கூறினாராம். தனுஷின் பதிலைக்கேட்டு உற்சாகமான வேல்ராஜ், தற்போது இந்த ஒன்லைனை வைத்து திரைக்கதை அமைக்கும் பணியில் பிஸியாக இருக்கிறார் வேல்ராஜ். மற்ற விவரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம்.


No comments:

Post a Comment