செல்கான் கேம்பஸ் ஒன் A354C ஸ்மார்ட்போன் ஒருபார்வை


செல்கான் நிறுவனம் தன்னுடைய Campus One A354C ஸ்மார்ட் போனை ரூ.2,599 அதிக பட்ச விலை என அறிவித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதில் ஆண்ட்ராய்ட் 4.4 கிட் கேட் சிஸ்டம் இயங்குகிறது. 3.5 அங்குல அளவில் HVGA திரை உள்ளது. இதன் டிஸ்பிளே திறன் 480 x 320 பிக்ஸெல்கள். ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் டூயல் கோர் ப்ராசசர் செயல்படுகிறது. 2ஜி தொடர்பு கிடைக்கிறது. இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை, இரு வேறு டிஸ்பிளேயுடன், இதில் இயக்கலாம். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாகவும், வி.ஜி.ஏ. கேமரா முன்புறமாகவும் தரப்பட்டுள்ளன. 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி, வை பி, புளுடூத் ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் ராம் மெமரி 256 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 512 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜி.பி. வரை அதிகரித்துக் கொள்ளலாம். இதன் பேட்டரி 1,200 mAh திறன் கொண்டது. Celkon Campus One A354C கருப்பு, சிகப்பு, வெள்ளை மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது. அதிக பட்ச விலையாக ரூ. 2,599 எனக் குறிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment