நிறைய கற்றுக்கொண்டேன் - லிங்கா நாயகி பேட்டி


ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, ரஜினிகாந்த் ஜோடியாக 'லிங்கா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து, தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா சம்பந்தப்பட்ட காட்சிகள் மொத்தமாக படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இரு தினங்களுக்கு முன்னர் சோனாக்ஷி சம்பந்தப்பட்ட காட்சிகளுடன் 'லிங்கா'வில் அவருடைய பங்கேற்பு முடிந்து விட்டது.


இது தொடர்பாக சோனாக்ஷி கூறியிருப்பதாவது, “லிங்கா'வை முடித்து விட்டேன். ரஜினிகாந்த் சாருக்கும், மொத்தக் குழுவினருக்கும் இந்த சந்தர்ப்பத்தை அளித்தற்காக நன்றி... படத்தில் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது, நிறைய கற்றுக் கொண்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.


தபாங், ரவுடி ரதோர், ஹாலிடேஉள்ளிட்ட சில ஹிந்தி வெற்றிப் படங்களில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. ஹிந்தியில் முன்னணியில் இருந்தாலும் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தமிழில் 'லிங்கா' படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் பட வெளியீட்டிற்குப் பிறகு தமிழிலும் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

No comments:

Post a Comment