விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் பலர் அதனைக் கைவிட்டுவிட்டு
வேறு விண்டோஸ் சிஸ்டங்களுக்கு மாறி வருவதால், விண்டோஸ்
சிஸ்டங்களின் பங்களிப்பு விகிதம் மாறி வருகிறது. அண்மைக் காலமாக விண்டோஸ் 8 மற்றும் 8.1 பயன்பாடு உயர்ந்து வருவதாக, இவற்றைக் கண்காணிக்கும் நெட் அப்ளிகேஷன் என்னும் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பன்னாட்டளவில் 13.37% பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஜூலையில் 6.56% பங்கினைக் கொண்டிருந்த விண்டோஸ் 8.1, தற்போது 7.09% ஆக உயர்ந்துள்ளது. விண்டோஸ் 8, 5.92% லிருந்து 6.28% ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும், விண்டோஸ் 7 தொடர்ந்து தன் ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறது. மொத்த கம்ப்யூட்டர்களில், 51.21% பேர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்திடும் நிறுவனங்களும் இதற்கு ஒரு காரணமாகும். எச்.பி. போன்ற நிறுவன்ங்கள் பல, விண்டோஸ் 8 சிஸ்ட்த்தைக் கைவிடுத்து, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். தங்களின் புதிய கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே பதிந்து தருகின்றனர்.
விண்டோஸ் எக்ஸ்பி தொடர் பயன்பாடு குறித்து, மைக்ரோசாப்ட் பல அபாய எச்சரிக்கை வழங்கிய பின்னரும், இந்த சிஸ்டத்தினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இன்னும் கணிசமாக இருக்கின்றது. 23.89% பேர் இன்னும் இதனைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இது கைவிடப்படுகிறது. விஸ்டா பயன்படுத்துவோர் 3.02% ஆக உள்ளனர்.
லினக்ஸ் பயன்படுத்துவோர் 1.67% ஆகவும், மேக் ஓ.எஸ். 10.9 பயன்படுத்துவோர் 4.29% ஆகவும் உள்ளனர்.
நீங்கள் இதனைப் படித்த பின்னர், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றப் போகிறீர்களா?

No comments:
Post a Comment