தமிழ் படத்தில் நடிக்க விரும்பும் ஹிந்தி நடிகர்
















பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சன்.அபிஷேக் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராயின் கணவர் ஆவார்.  கால்பந்து இந்தியன் சூப்பர் லீக்கின் (சென்னை டைட்டன்ஸ்) சென்னை அணியின் உரிமையாளர் ஆவார்.இவர் சென்னையில்,ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அப்போது அவர் கூறும்போது. 

நான் தமிழ் சினிமாவை பெரிதும் விரும்புகிறேன். தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஆர்வமாக  உள்ளேன்.  சென்னையில் பல முறை படப்பிடிப்புக்காக வந்து உள்ளேன். சென்னையில்  எனக்கு நண்பர்கள் உள்ளனர். நான் குழந்தை பருவத்தில் இருக்கும் போது சென்னைக்கு அதிக முறை வந்து உள்ளேன். அப்பாவின் பல படங்களுக்கு இங்கே வேலை நடக்கும். பல  கோடைகாலங்களை  சென்னையில் கழித்து உள்ளோம்.என்று கூறினார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம் ஆகியோரை பிடிக்கும் என்று கூறினார்.

No comments:

Post a Comment