தரமான படங்களைக் கொடுத்து தரமான
இயக்குனர் என்று பெயர் எடுக்க வேண்டுமென்றால் அதற்கான உழைப்பும் தேடலும் அவசியம்.
தெலுங்கில் தற்போது இரண்டு பிரம்மாண்டமான
சரித்திரத் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. ஒன்று 'பாகுபலி', மற்றொன்று
'ருத்ரமாதேவி'. இரண்டிலும்
அனுஷ்காதான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவற்றில்
'ருத்ரமாதேவி' படத்தை
இயக்கி வரும் குணசேகர் அந்தப் படத்திற்காக 9 வருடங்களாக ஆராய்ச்சி செய்து வந்தாராம். 13ம்
நூற்றாண்டில் தெலுங்கு தேசத்தில் இருந்த காக்கத்தியா பேரரசு பற்றி முழுமையாகத்
தெரிந்து கொள்வதற்காக படத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் சுமார் 9 வருடங்கள்
முன்பு 2002ம்
ஆண்டிலிருந்து அதைப் பற்றிய முழுமையான தகவல்களை பல்வேறு விதங்களில் திரட்டினாராம்
குணசேகர். அதன் பிறகே படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்.
“இம்மாதிரியான படங்களை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. எண்ணற்ற
நட்சத்திரங்கள், பிரம்மாண்டமான
அரங்குகள், அதற்கான
முன், பின்
வேலைகள், என
அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3டி
படம் இது, அதே
சமயம் 2டியிலும்
படத்தை வெளியிடுகிறோம். இப்படத்திற்காக பலர் அவர்களது திரையரங்குகளை 3டி
திரையிட வசதியாக மாற்றி வருகிறார்கள். படம் பார்ப்பவர்களை இப்படம் 13ம்
நூற்றாண்டிற்கே அழைத்துச் செல்லும்,” என்கிறார் இயக்குனர் குணசேகர்.
இளையராஜா இசையமைத்து வரும் இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இளையராஜா இசையமைத்து வரும் இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
No comments:
Post a Comment