உதயநிதி அடுத்த படம் என்ன ?











நயன்தாரா உடன் ஏற்பட்ட சினேகம் காரணமாக உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தில் பூகம்பம் என்றும், இனிமேல் அவர் படங்களில் நடிக்க மாட்டார் என்றும் திரைத்துறையில் பரபரப்பான செய்திகள் பரிமாறப்பட்டு வந்தது. அந்த செய்திகளை பொய்யாக்கும் வகையில் உதயநிதியின் புதுப்பட அறிவிப்பு அடுத்தடுத்து வந்த வண்ணம் உள்ளன. தற்போது நண்பேன்டா என்ற படத்தில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், அப்படத்தைத் தொடர்ந்து அஹமது இயக்கத்தில் இதயம் முரளி என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதயம் முரளி படத்தை அடுத்து கெத்து என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மான் கராத்தே படத்தை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் இப்படத்தை இயக்கவிருக்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் படநிறுவனம் கெத்து படத்தைத் தயாரிக்கிறது. மான்கராத்தே படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார். சில தினங்களுக்கு முன் கெத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டது.
உதயநிதி ஸ்டாலினின் ஆக்ஷன் ஹீரோவாக நடிப்பதுபோல் உருவாக்கப்பட்டிருந்த கெத்து படத்தின் போஸ்டரைப் பார்த்தவர்கள் நிச்சயம் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். காரணம்... தி போர்ன் லீகஸி என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரை அப்பட்டமாக காப்பியடித்து அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதை வைத்து கெத்து படம் கூட தி போர்ன் லீகஸி படத்தின் காப்பியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த சந்தேகத்துக்கும், சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்திருக்கிறார். நான் அடுத்ததாக நடிக்கும் கெத்து படத்தின் போஸ்டர் என வெளிவந்திருப்பது ரசிகர்களால் உருவாக்கப்பட்டதே தவிர, அது அதிகாரபூர்வமானதல்ல! என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment