இந்தியாவின்
மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட், ஆன்லைன் பேஷன் பொருட்கள் விற்பனை நிறுவனமான மின்த்ராவை ரூ.2,000 கோடிக்கு தற்போது வாங்கியுள்ளது.
‘இது ஒரு 100% கையகப்படுத்தல்
ஆகும் மற்றும் இந்த துறையில் முன்னோக்கி செல்ல பெரிய திட்டங்கள் உள்ளன,’ என்று பெங்களூரு சார்ந்த ஃபிளிப்கார்ட் அமைப்பின் துணை நிறுவனரான
சச்சின் பன்சால், கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த
நிறுவனம், ஒட்டுமொத்த ஊழியரின் (முழு
நேரம்) வலிமை 4,000 வரை
உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 3,000 பேரும், மின்த்ரா நிறுவனத்தில் சுமார் 750 பேரும் பணியாற்றுகின்றனர்.
இந்த
ஒப்பந்தத்தால் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் ஃபேஷன் வர்த்தகத்தில்
ஒரு வலுவான பிடியை ஃபிளிப்கார்ட் நிறுவனம் தக்க வைத்துக்கொள்கிறது. ‘ஃபிளிப்கார்ட் அடுத்த சில ஆண்டுகளில் ஆன்லைன் ஃபேஷன் வர்த்தகதத்தில்
மிகப்பெரிய தயாரிப்பாக வளர்ந்து வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது’ என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் இரண்டு நிறுவனங்களும்
அறிவித்துள்ளது.
மின்த்ராவின்
நிறுவனரான, முகேஷ் பன்சால், ஃபிளிப்கார்ட் குழுவில் இணைவார் மற்றும் ஃபேஷன் இகாமர்ஸ் வணிகத்தில்
தலைமை வகிப்பார் என்றும் அறிவித்துள்ளனர். ‘நாங்கள் ஃபிளிப்கார்ட் உடன் இணைத்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக
உள்ளது. இந்த இணைப்பு இ-காமர்ஸ் வர்த்தகத்தில் ஒரு சவாலாக இருக்கும்,’ என்று முகேஷ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.