பரத்தின் 25ஆவது படம் - ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

  2003 ஆண்டு ஷங்கரின் பாய்ஸ்படம் மூலம்  சினிமா உலகில் பரத் அடியெடுத்து வைத்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. மொத்தம் இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறார். ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குனராக இருந்த செந்தில் குமார் இயக்கத்தில் பரத்தின் 25 ஆம் படமாக ‘ஏழு கடல் தாண்டிஇருக்கும் என்றொரு அறிவிப்பு இதற்கு முன்பு வெளியானது.
ஆனால் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணிஎனும் பெயரில் பரத் நடிக்கும் படம்தான் அவரது 25 படம் என்று அதன் பிறகு அறிவிக்கப்பட்டது. பூபதி பாண்டியனிடம் திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் மலைக்கோட்டை போன்ற படங்களில் பணிபுரிந்த எல்.ஜி. ரவிசந்தர் இயக்கும் இப்படத்தில் பரத் ஜோடியாக நந்திதா நடிக்கிறார். ஷூட்டிங் கிட்டத்தட்ட நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
தமிழ் சினிமாவில் உள்ள 18 காமடி நடிகர்கள் இப்படத்தில் நடிப்பது சிறப்பு செய்தி. மனோபாலா, இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி, கருணா ( சூது கவ்வும்), தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை தயாரிப்பது புஷ்பா கந்தசாமி மற்றும் எஸ். மோகன்.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியின் முதல் போஸ்டர் டிசைன் இன்று வெளியானது.