பூஜையுடன் துவங்கியது “சண்டமாருதம்"

மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின்ஸ்டீபன் இணைந்து தயாரிக்க புரட்சிதிலகம் சரத்குமார் வித்தியாசமான இரு வேடங்களில் நடிக்கும் சண்டமாருதம் என்ற திரைப் படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.

இந்த படத்தின் கதாநாயகிகளாக சரயு, அவ்னி மோடி நடிக்கிறார்கள். சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லிகணேஷ், காதல் தண்டபாணி , ஆதவன், பாபூஸ், அவினாஷ், மாளவிகா, கானா உலகநாதன் நடிக்கிறார்கள். இவர்களுடன் கன்னடத் திரையுலகின் பிரபல நடிகர் அருண்சாகர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் ராதிகா சரத்குமார் நடிக்கிறார்.