பிரேம்ஜியின் காதலி யார்?

இதுநாள்வரை ஓபன் தி பாட்டிலாக மட்டுமே இருந்த பிரேம்ஜி அமரன் தனது காதலை ஓபன் செய்திருக்கிறார்.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனது காதலை குறித்து மனம் திறந்தார் பிரேம்ஜி.
என்னதான் விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் காதல் அப்படியொன்றும் விளையாட்டுத்தனமாக யாரையும் கடந்துவிடாது. பிரேம்ஜிக்கும் ஒரு மானசீக காதல் உள்ளது. அந்த காதலியை நினைத்து என்னமோ நடக்குது படத்தில் ஒரு காதல் பாடலையும் ஒலிப்பதிவு செய்தார். ஒரு கண்ணை சாய்ச்சு நீஎன்று தொடங்கும் அந்தப் பாடலை தனது காதலியை மனதில் வைத்து கம்போஸ் செய்தாராம்.
பாடலின் சிடி தயாரான பிறகு அதன் ஒரு பிரதியை தான் காதலிக்கும் பெண்ணிடம் தந்திருக்கிறார். பதிலுக்கு அந்தப் பெண் வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
இந்த பேட்டியின் வழியாக பிரேம்ஜியின் காதல் அவர் காதலிக்கும் பெண்ணிற்கும் தெரிந்திருக்கும். அவரும் பிரேம்ஜியை காதலிக்கிறாரா என்பது கேள்விக்குறி.
இவ்வளவு விலாவரியாக காதலை சொன்ன பிரேம்ஜி காதலிக்கும் பெண் யார் என்பதை மட்டும் சொல்லவில்லை. இதிலிருந்து தெரிய வருவது என்ன?
பிரேம்ஜி காதலிக்கும் பெண் எல்லோருக்குமே அறிமுகமான பிரபலம். க்ளூ தந்திட்டோம்…. எங்கே கண்டுபிடிங்க பார்க்கலாம்.