இயேசு சினிமா விமர்சனம்

இயேசுநாதர் அற்புதங்கள் செய்யத் தொடங்கியதில் இருந்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுவது வரை உள்ள வாழ்க்கையை கூறும் படமே இயேசு.
ரோமானியர்களின் அடக்கு முறையில் இருந்து தங்களை மீட்க தீர்க்க தரிசன கூற்றுப்படி மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இயேசு தன்னுடைய அற்புதங்கள் மூலம் மக்களிடையே நம்பிக்கையை பெறுகிறார். மக்கள் அவரை தங்கள் மீட்பராக நினைக்கிறார்கள்.

ரோமானியர்களிடம் இருந்து தங்களை மீட்பார் என்று நினைத்து அவரை யூதர்களின் ராஜாவாக யூத மக்கள் கொண்டாடுகின்றனர். ஆனால், இயேசுவோ தேவனுடைய ராஜ்யம் பற்றி கூறி, மக்களை பாவங்களில் இருந்து மீட்க வந்தவராகவே போதிக்கிறார்.
காலத்தை தாண்டிய அவருடைய கருத்துகளாலும், முற்போக்கு செயல்களாலும் தன்னை தேவ குமாரன் என்று கூறிக்கொண்டதாலும் யூத மத குருக்கள் கோபம் அடைகிறார்கள். இதனால் இயேசு, அவருடைய சிஷியர் யூதாஸ் மூலம் கைது செய்யப்பட்டு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வருகிறார்.
தன்னுடைய சீடர்களுக்கு தேவ குமாரனாக காட்சி தந்து உலகமெங்கும் சென்று மக்களை தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு ஆயத்தப்படுத்துங்கள் என்று மீண்டும் அனைத்தையும் புதிதாக்க வருவேன் என்று சொல்வதோடு படம் முடிகிறது.
படத்தில் இயேசுவாக நடித்திருக்கும் டைகோ மார்கடோ, தன் நடிப்பு திறனால் அனைவரையும் ரசிக்க வைக்கிறார். சாந்தமான முகமும் அழகிய கண்களும் ரசிகர்களை ஈர்க்கிறது.
லார்னி பால்பியின் மெல்லிய இசையில், இயேசு கைது செய்யப்பட்ட பிறகு உள்ள காட்சிகளில் இசையால் ஒரு பதட்டத்தை உருவாக்கியிருக்கிறார். ராப் கோல்டியின் ஒளிப்பதிவில் அந்தக் கால அரங்குகளை அழகாக காட்டியுள்ளார்.
எல்லோருக்கும் தெரிந்த இயேசுவின் வாழ்க்கையை இக்காலத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதை அமைத்து காட்சிகளை விறுவிறுப்பாக எடுத்துள்ளார் இயக்குனர் கிறிஸ்டோபர் பென்சர்.
நடிகர் : டைகோ மார்கடோ
இயக்குனர் : கிறிஸ்டோபர் பென்சர்
இசை : லார்னி பால்பி
ஓளிப்பதிவு : ராப் கோல்டி