இயக்குனராகும் ஷகிலா

முன்னாள் கவர்ச்சி நடிகையும், இன்றைய காமெடி நடிகையுமான ஷகிலா தெலுங்கில் படம் இயக்குகிறார். தான் எழுதிய உணர்வுப்பூர்வமான கதையையே அவர் படமாக்குகிறார்.

மலையாளத்தில் கவர்ச்சிப் படங்களில் நடித்து பிரபலமானவர் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாள சினிமாவில் லாபம் சம்பாதிக்கும் ஒரே நட்சத்திரமாக ஷகிலா இருந்தார்.
மலையாள சினிமா என்றால் ஷகிலா, ஷகிலா என்றால் மலையாள சினிமா என கேரளாவின் திரையுலகம் மாற்றமடைந்ததை கண்டு எரிச்சலடைந்த மலையாள திரையுலகினரே ஷகிலாவை கேரளாவிலிருந்து துரத்தினர். அப்படி தமிழகத்தில் தஞ்சமடைந்தவர் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் ஷகிலாவின் சுயசரிதை ஆத்மகதா என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்தது. ஷகிலாவே அதனை எழுதியிருந்தார். ஆத்மகதா பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
ஷகிலாவின் சுயசரிதை பரவலான கவனிப்பை பெற்றநிலையில் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகு கணவனை இழக்க நோரிடும் பெண் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், குழந்தையை வளர்க்க அவள் எதிர்கொள்ளும் சவால்களையும் ஷகிலாவே திரைக்கதை அமைத்து எழுதியுள்ளார். அந்தக் கதையைதான் அவர் தனது முதல் படமாக எடுக்க உள்ளார்.
கவர்ச்சி துளியும் இல்லாத உணர்ச்சிச் சித்திரமாக இந்தப் படம் இருக்குமாம்.