லிங்கா - ரஜினியின் அடுத்த படம்

கோச்சடையான் ரிலீசுக்குபின் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தினை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். 

இந்த படத்திற்கான எல்லா வேலைகளும் நடைபெற்று வருகின்றன. மே 2 முதல் லிங்கா படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தின் தலைப்பு லிங்காஎன அறிவிக்கப்பட்டுள்ளது. தந்தை, மகன் என இரு மாறுபட்ட வேடங்களில் ரஜினி நடிக்கிறார். இந்த படத்தின் கதாநாயகிகளாக சோனாக்‌ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடிக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ந்து மைசூரில் நடைபெறுகிறது. இந்த படத்தினை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.