‘ஐ’ பட பாடல் வெளியிடு

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் நடந்துள்ளது. 
இதில் விக்ரம் உடல் மெலிந்து ஒல்லியாக வித்தியாசமான கேரக்டரில் வருகிறார்.
இதில் நாயகியாக எமிஜாக்சன் நடிக்கிறார். சுரேஷ்கோபி, சந்தானம் ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது.
பட பாடல்களை கனடாவில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதன் பாடல் வெளியீட்டு விழாவை கனடாவில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. ஹாலிவுட் படத்துக்கு இணையாக உள்ள இப்படத்தை மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.