கேப்டன் பிரபாகரன் ரீமேக்கில் விஜய்

 விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரன் 1991ல் வெளிவந்தது இதன் மூலம் விஜயகாந்திற்கு கேப்டன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. தற்போது இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்க விஜய் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜா ராணி படத்தை இயக்கிய இளம் இயக்குனர் அட்லீ இந்த படத்தை இயக்க உள்ளார். இவர் சமீபத்தில் இந்த கதையை பற்றி விஜயிடன் கூறியதாகவும், அவரும் கேப்டன் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.
கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக சத்திய மங்கலம் காட்டில் வீரபத்திரன் (மன்சூர் அலிகான்) என்ற தீவிரவாதியை கைது செய்கிறார்.ஆனால் ஊழல் செய்யும் ஒரு போலீஸ் அதிகாரி வீரபத்திரனை நடுரோட்டில் சுட்டுக் கொள்கிறார்.இதன் பிறகு என்ன நடக்கிறது என்ற சுவாரஸ்யமான கதையை மையபடுத்தி இப்படம் நகர்கிறது.
இது சம்மந்தமான தகவல்கள் எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடவில்லை, இந்த கதையில் இளையதளபதி விஜய் நடித்தால் அது அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.