எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் மூணே மூணு வார்த்தை















திருடன் போலீஸ்படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.பி.பி.சரண் புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு மூணே மூணு வார்த்தைஎன்று தலைப்பிட்டுள்ளார். வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்காஆகிய படங்களை இயக்கிய மதுமிதா இதனை இயக்குகிறார். இதுவரை எஸ்.பி.பி.சரண் தான் தயாரித்த அத்தனை படங்களிலும் புதுமுக இயக்குனர்களையே அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் இப்படத்தை ஏற்கெனவே இரண்டு படங்களை இயக்கிய மதுமிதாவிடம் இயக்கும் பொறுப்பை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து எஸ்.பி.பி. சரண் கூறும்போது, “தரமான படங்கள் தயாரிக்க வேண்டுமென்பதுதான் என் லட்சியம். நல்ல தரமான, வித்தியாசமான இசையைக் கேட்டு வளர்ந்த எனக்கு அதே மாதிரியான வித்தியாசமான கதைகளில் பேரார்வம் உண்டு. என்னுடைய படங்கள் ஒன்றுகொன்று வித்தியாசமாக இருக்கும். வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதிலும், விமர்சகர்களின் பாராட்டை பெறுவதிலும் எனது படங்கள் முதன்மையாக இருக்கும்.
இந்த படத்தில் 5 முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறோம். என்னுடைய நிறுவனம் புதிய கலைஞர்களை உருவாக்கும் பட்டறையாக இருப்பது எனக்கு பெருமையே. இதுவரை என்னுடைய எல்லாப் படங்களிலும் புதிய இயக்குனர்கள் அறிமுகமானார்கள். ஆனால், இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியவர்.
ஆயினும், தெலுங்கில் அவர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.” 'ஒரு அறிமுக இயக்குனருக்கான புத்துணர்ச்சியோடும், துடிப்போடும் அவர் இயக்குவது படத்தின் வெற்றிக்கு உத்திரவாதம் தருகிறது. மூணே மூணு வார்த்தை' ஜனரஞ்சகமான நகைச்சுவை காதல் சித்திரம்.


No comments:

Post a Comment