‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது
‘அட்டக்கத்தி’ தினேஷை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி
வருகிறார்.
இப்படத்திற்கு ‘விசாரணை’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில்
தினேஷிற்கு ஜோடியாக ஆனந்தி நடித்து வருகிறார். மேலும் சமுத்திரகனி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் நடித்து
வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
வெற்றிமாறன்
இயக்கிய ‘ஆடுகளம்’ படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய
விருது கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து தமிழில் எந்த படமும் அவர் இயக்கவில்லை.
மாறாக,
இவரது உதவியாளர்கள்
இயக்கும் படங்களை தயாரிப்பது மற்றும் திரைக்கதை எழுதுவது, வசனங்கள் எழுதுவது ஆகிய பணிகளில் ஈடுபட்டு
வந்தார்.
தற்போது விசாரணை
மூலம் மீண்டும் இயக்குனர் பணியை தொடர்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 நாட்களில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக
கூறப்படுகிறது.
இப்படக்குழுவினர்
தற்போது கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இன்று இப்படத்தின்
பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி
வருகிறது.
No comments:
Post a Comment