434 ரூபாய்க்கு பாஸ்ட்பாக்ஸ் ஸ்மார்ட் வாட்ச்










ஆப்பிள் வாட்சின் விலை ரூ. 21,642. மோட்டோரோலாவின் மோட்டோ ரூ. 22,300 ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ. 15,441சாம்சங்கில் காலெக்சி கியர் ரூ. 12,327 ஆரம்பமாகிறது. ஆனால், பாஸ்ட்பாக்ஸ் எனும் நிறுவனம், ஸ்மார்ட் வாட்சை ( ரிஸ்ட்பாண்ட் ) அதிரடி விலை குறைப்பு செய்து ஜஸ்ட் ஏழு டாலரில் அறிமுகப்படுத்தப்போகிறது.
சாப்ட்வேரை எளிமையாக வைத்துக்கொண்டு, ஹார்ட்வேரிலும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் குறைந்த விலையில் ஸ்மார்ட் ரிஸ்ட்பாண்ட் சாத்தியமே என்று அந்த நிறுவனம் சொல்கிறது. தற்சமயம் ஆஸ்திரேலியாவின் பிரபலமான கிரவுட் பண்டிங் இணையதளமான பாஸிபில் மூலம் இந்த வாட்ச் கருத்தாக்கத்தை வெள்ளோட்டம் விட்டு ஆதரவு கேட்டுள்ளது.
தற்போது சந்தையில் உள்ள வியரபில் எனக் குறிப்பிடப்படும் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் பலவகையான ஸ்மார்ட் பாண்ட்கள் விலை அதிகமானதாகவும் பயன்படுத்தச் சிக்கலானதாகவும் இருப்பதாக பாஸ்ட்பாக்ஸ் கூறுகிறது. எனவே பத்து டாலருக்கும் குறைவாக ஸ்மார்ட் ரிஸ்ட்பாண்டை உருவாக்கி இருப்பதாக இதற்கான நிதி திரட்டும் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பக்கத்தில் முதல் 100 ரிஸ்ட்பாண்ட்கள் ஏழு டாலருக்கு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டு டாலருக்கு கறுப்பு நிறப் பட்டை மற்றும் ஒன்பது டாலருக்குப் பல வண்ணப் பட்டைகளும் அளிக்கப்படும். ஆதரவு அளிக்கும் நிதிக்கு ஏற்ப பரிசாக இந்தத் தயாரிப்பு வழங்கப்படும். திட்டத்துக்கான இலக்கு நிறைவேறினால்தான் இது செயலுக்கு வரும். இதன் பின்னே உள்ள தொழில்நுட்பம், இது செயல்படும் விதம், இதன் செயலிகள், பயன்பாடு பற்றி எல்லாம் இணையப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment