சிங்கம் படத்திற்கு பிறகு
தான் தயாரித்த கெளரவம் என்ற படத்தில் ஒரு முதிர்ச்சியான வேடத்தில் நடித்த
பிரகாஷ்ராஜ்,
உன் சமையல் அறையில் என்ற படத்தை தயாரித்து, இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். ஆனால் அந்த இரண்டு படங்களுமே
ஓடவில்லை. அதனால் சொந்த படம் எடுத்து தொடர்ந்து கையை சுட்டுக்கொள்ள வேண்டாமென்று அந்த
விஷப்பரீட்சையில் இறங்குவதை நிறுத்தி விட்டவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும பரவலாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் மற்ற மொழிகளில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜை தமிழில்தான் யாரும் வில்லன் வேடத்தில் நடிக்க அணுகவில்லை. மாறாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக யூஸ் பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் துல்கர்சல்மான்-நித்யாமேனன் நடித்து வரும் ஓகே கண்மனி படத்தில் பிரகாஷ்ராஜ்க்கு உருக்கமான வேடமாம்.
அதையடுத்து கழுகு கிருஷ்ணா நடிக்கும் ஒரு படத்திலும் கேரக்டர் நடிகராகியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அந்த படத்திலும் இதுவரை பார்க்காத குணசித்ர நடிகராக பிரகாஷ்ராஜை பார்க்கலாமாம். அதனால் இனி இதே ரூட்டில் தொடர்ந்து பயணிக்கவும் முடிவெடுத்து விட்ட பிரகாஷ்ராஜ், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் வித்தியாசமான கேரக்டரில்தான் நடித்திருக்கிறாராம்.

No comments:
Post a Comment