சமூக
வலைத்தளங்கள் திரைப்படங்களை விளம்பரப்படுத்தும், ரசிகர்களிடம் திரைப்படங்களை கொண்டு சேர்க்கும்
ஊடகவெளியாக வளர்ந்துள்ளது. மலையாளப்பட இயக்குனர்கள் பல வருடங்களுக்கு முன்பே
ஃபேஸ்புக் மூலமாக தங்களின் படங்களை விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.
பிள்ளையார்சுழி போல படம் ஆரம்பிக்கும் முன் ஃபேஸ்புக்குக்கும், ட்விட்டருக்கும் நன்றி தெரிவிக்கும் போக்கு அங்கு நிலைபெற்றிருக்கிறது.
நமக்கு
தயக்கம். ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும்தானே நமது படங்களை கிழி கிழியென்று கிழிக்கிறார்கள். அதில்
போய் நாம் இணைவதா?
அறிவியல்
வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது. நாம்தான் அதில் ஐக்கியமாக வேண்டும். இந்த
யதார்த்தம் புரிந்து இப்போது அதிக அளவில் சமூக வலைத்தளத்தில் சினிமா பிரபலங்கள்
தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இசை படம் வெளிவருவதை முன்னிட்டு
எஸ்.ஜே.சூர்யாவும் ட்விட்டரில் இணைந்துள்ளார்.
ரஜினியை போல் ஒரு வெல்கம் வணக்கம்
போட்டு காணாமல் போய்விடாமல், இசை படத்தின் பாடல்களை எப்படி உருவாக்கினேன் என்ற வீடியோவை
வெளியிட்டுள்ளார். விரைவில் ஃபேஸ்புக்கிலும் அக்கவுண்ட் ஓபன் செய்யவிருக்கிறாராம்.
No comments:
Post a Comment