நயன்தாராவும், த்ரிஷாவும் சமகாலத்து நடிகைகள்தான். அதனால் அவர்கள் என்ட்ரி
ஆனபோது ஒருவரது படவாய்ப்பை ஒருவர் தட்டிப்பறிப்பது என்பது சாதாரணமாக நடந்து
வந்தது. அதனால் ஏதாவது சினிமா விழாக்களில் சந்திக்க நேர்ந்தால் ஆளுக்கொரு திசையில்
பார்த்தபடிதான் அவர்கள் இருவரும் காட்சி கொடுத்து வந்தனர்.
ஆனால்
இப்போது நிலைமை மாறி விட்டது. இருவரும் தனிமையில் அமர்ந்து மணிக்கணக்கில் பேசும்
தோழிகளாகி விட்டனர். அப்படி அவர்களுக்கிடையே இருந்த பகையை மறக்கடித்து தோழிகளாக
மாற்றியது ஆர்யாதான். அவர்கள் இரண்டு பேருக்குமே நண்பர்களாக அவர் இருந்ததால்தான்
இது சாத்தியமானது.
இந்த நிலையில், உங்களது தோழி நயன்தாராவைப் போன்று நீங்களும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் ஆர்வம் காட்ட வேண்டியதானே? என்று த்ரிஷாவைக்கேட்டால், அதெல்லாம் சரிப்பட்டு வராது என்கிறார். மேலும், அந்த மாதிரி நடித்தால் ஓரிரு படங்களில் நடிக்கலாம் . அதோடு அந்த படங்கள் வெற்றி பெற்று விட்டால் பிரச்சினை இல்லை. தோற்று விட்டால் இருக்கிற மரியாதையும போய் விடும். அதனால்தான் நான் அந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்க ஆசைப்படுவதில்லை என்கிறார் த்ரிஷா.

No comments:
Post a Comment