பூஜை சினிமா விமர்சனம்











ஹரி படத்தில் இருக்கும் வழக்கமான அடிதடி, கூட்டுக்குடும்பம், வில்லன், காதல், சுமோ கார்கள், அரிவாள்கள் இந்த படத்திலும் உண்டு.பொதுவாக ஹரி படத்தில் அழகான குடும்பம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் இருக்கும் குடும்பம் ஒரு கொலைகார குடும்பம்.

விஷாலுக்கு அப்பா கிடையாது ,விஷால் குடும்பத்தில் ஒரே பிள்ளை, ஆண் பிள்ளை விஷால்தான். தன் மகனை பல வருடங்களாக ஒதுக்கி வைத்திருந்த தாய் ஒரு நாள் தன் மகனை வரவழைத்து வில்லனை போட்டுதள்ளும்படி விஷாலை தூண்டிவிடுகிறார்கள். வில்லனை விஷால் அடித்து துவைத்த பிறகு குடும்பத்தில் உள்ள அனைவரும் விஷாலை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

விஷாலும் ஸ்ருதியும் காதலிக்கிறார்கள். சூரியும் இமான் அண்ணாச்சியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ஒரு விதத்தில் சலிப்பு உண்டாகிறது. விஷால் சூரி சேர்ந்துவரும் காட்சிகளில் சூரி விஷாலிடம் அடிவாங்குகிறார். (இது காமடியாம்).
காவல்துறை அதிகாரியாக வரும் சத்யராஜ் கொஞ்ச நேரம் வந்துவிட்டு பிறகு காணமல் போகிறார். விஷால் வில்லனை கொன்ற பிறகு கடேசியில் வருகிறார் சத்யராஜ். இறந்துபோன வில்லனை தன் துப்பாகியால் சுட்டு ஹீரோ விஷாலை தப்பிக்க விடுகிறார். இது நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த காட்சிதான் .

யுவன் ஷங்கர் ராஜா இசையில் தேவதையைஎன்ற ஒரு பாடல் மட்டும் ஓகேமொத்தத்தில் ஹரி இயக்கிய சாமி, வேல், சிங்கம் படங்களில் இருந்த வேகம் இந்த படத்தில் இல்லை.


No comments:

Post a Comment