புதிதாக
அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் ப்ளஸ் மொபைல் போன்கள், வரும் அக்டோபர்
மாத இறுதிக்குள், 69 நாடுகளில்
விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஆண்டு இறுதிக்குள்ளாக, மேலும் 115 நாடுகளில் இவை விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியா உட்பட சென்ற வாரம், இவை 36 நாடுகளில் விற்பனைக்கு வந்தன. முதலில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட்ட நாடுகளில் அறிமுகமாகி, பெரிய அளவில் மக்களிடையே, இந்த போன்கள் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. சென்ற வாரம் சீனா மற்றும் இந்தியாவில் வெளியாகின. ஆப்பிள், தன் போன்களுக்கு நல்ல விற்பனைச் சந்தையை, அமெரிக்கா தவிர்த்து வெளிநாடுகளில் தான் உருவாக்க முடியும் என்று முடிவு செய்து இந்த தீவிர முடிவுகளை எடுத்துள்ளது.
பெரிய அளவிலான திரை, மேம்படுத்தப்பட்ட செயல் திறன் கொண்ட கேமரா மற்றும் மொபைல் வழி பொருள்கள் வாங்குவதற்கான பணம் செலுத்தல் போன்ற வசதிகளால், இந்த இரு போன்களும் மக்களிடையே நல்ல பெயரைப் பெற்று வருவதாக, ஆப்பிள் அறிவித்துள்ளது. அக்டோபர் 17ல் சீனா, இந்தியா மற்றும் மொனோகோ நாடுகளில் இவை அறிமுகமாயின. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 23, 24, 30 மற்றும் 31 தேதிகளில், உலகின் பல நாடுகளில் இந்த போன்கள் விற்பனைக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment