இயக்குனர் பாலாவுக்கு முத்தம் கொடுத்த நடிகை பூஜை












பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூஜா. இலங்கையை சேர்ந்த சிங்களப் பெண்ணான பூஜாவுக்கும் பாலாவுக்கும் கெமிஸ்ட்ரி இருப்பதாக நான் கடவுள் படம் எடுக்கப்பட்ட காலக்கட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
அந்தப் படத்தில் ஆர்யாவும் நடித்ததால், பாலாவுக்கும் பூஜாவுக்குமான கிசுகிசுவை அப்போது யாரும் பெரிதுபடுத்தவில்லை.
நாளடைவில் அதை மறந்தே போய்விட்டனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற விழாவுக்கு வந்திருந்தார் இயக்குநர் பாலா. அதே விழாவுக்கு நடிகை பூஜாவும் வந்திருந்தார்.
பாலாவைக் கண்டதும், ஓடோடி வந்து அவரைக் கட்டிப்பிடித்து அவரது கன்னத்தில் பச்சக் என்று முத்தமிட்டார்.
பூஜாவின் முத்தமழையில் நனைந்ததில் சற்று நேரம் திக்குமுக்காடிப்போன பாலா, பதிலுக்கு பூஜாவின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் கொடுத்தார்.
அந்த விழாவுக்கு வருகை தந்திருந்த அத்தனை சினிமா பிரபலங்களும் இந்த முத்தக்காட்சியைக் கண்டதும் அப்படியே அதிர்ச்சியாகிவிட்டனர்.
தமிழ்சினிமாவில் மற்ற இயக்குநர்களிடமிருந்து மாறுபட்டவராக பேர் வாங்கி உள்ளார் பாலா.
அதாவது, எப்பேற்பட்ட ஹீரோவாக இருந்தாலும் அவர்களை வாடா போடா என்று ஒருமையில்தான் அழைப்பார் பாலா.
அந்தளவுக்கு தன்னுடைய ஆதிக்கத்தை எல்லாரிடமும் செலுத்துவார். அதுவே பாலாவின் பலம் என்று சொல்பவர்களும் உண்டு.
அப்படிப்பட்ட பாலாவை பகிரங்கமாக ஒரு நடிகை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது திரைப்படத்துறையினரை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.


No comments:

Post a Comment