சண்டமாருதம் ஸ்பெஷல்













சண்டமாருதம் படத்தின் மூலம் அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சித் தலைவர், சட்மன்ற உறுப்பினர், நடிகர் சங்கத் தலைவர், முதல்வரின் அன்புக்கு பாத்திரமானவர், தயாரிப்பாளர் இப்படி பன்முகங்களை கொண்ட சரத்குமார் சண்டமாருதம் படத்தின் மூலம் காதாசிரியராகவும் மாறியிருக்கிறார். இத்தனை பொறுப்புகள் வகித்தாலும் பொள்ளாச்சியில் மீரா நந்தனுடன் ஜாலியாக டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்.

* எப்படி திடீர்னு கதாசிரியர் ஆயிட்டீங்க?

உங்களுக்கு தெரியாதா இன்னொரு சரத்குமார் இருக்கார். அவர் எழுத்தாளர் சரத்குமார். என்னோட வாழ்க்கையே பெங்களூர்ல ஒரு பத்திரிகையாளராத்தான் ஆரம்பிச்சுது. நிறைய கதை எழுதுவேன், கவிதை எழுதுவேன். நடிக்க வந்த பிறகு அதுக்கு நேரம் இல்லாம போச்சு. சண்டமாருதம் கதை பல வருஷம் என்னோட மனசுக்குள்ள இருந்தது. அதை இப்போ எடுத்து வெளியில விட்டுருக்கேன். எழுத்தாளர் ராஜேஷ்குமார் எனக்கு பிடித்த க்ரைம் எழுத்தாளர் என்னோட கதையும் க்ரைம்ங்றதால அவர்கிட்ட படிக்க கொடுத்து நீங்களே ஸ்கிரீன் ப்ளே, டயலாக் எழுதிக் கொடுத்திடுங்கன்னு கேட்டேன். கதையை படிச்சிட்டு இப்படி ஒரு விஷயம் எனக்கு தோணலையேன்னு ஆச்சர்யப்பட்டவர் மளமளன்னு எழுதிக் கொடுத்திட்டார். சண்டமாருதம் ரெடி.

* அப்படி என்ன இருக்கு சண்டமாருதத்தில்?

ஒவ்வொரு மனிதன் செயலுக்கும் ஒரு காரணம் இருக்கு. ஒரு தாதா உருவாகியிருக்கான்னா அவன் பிறக்கும்போதே தாதா இல்லை. அவன் உருவாக்கப்படுகிறான். அவனுக்கும் மனசு இருக்கு, குடும்பம் இருக்கு. அந்த தாதாவை அழிக்கிற என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டும் தானா பொறக்குறதில்லை போலீஸ் துறையால உருவாக்கப்படுகிறான். அவன் செய்றது என்கவுண்டரா இருந்தாலும் ஒரு வகையில அதுவும் கொலைதான். அந்த கொலை செய்ற அவனோட மனசு எப்படி இருக்கும். அவனோட குடும்பத்தார் மனசு எப்படி இருக்கும். இப்படி இருதுருவங்களோட செயல்பாட்டை சொல்லி அதன் பின்னணியும் காட்டுற படம்.

* இப்போ டவுள் ஆக்ஷன் சீசன். அதான் நீங்களும் அப்படியே...?

(கேள்வியை முடிப்பதற்குள்) நான் பண்ணாத டபுள் ஆக்ஷனா... அதெல்லாம் நிறைய பண்ணியாச்சு. இந்தப் படத்துல ரெண்டுமே பவர்வுல் கேரக்டர். ஒரு கேரக்டர்ல நான் நடிச்சிட்டு இன்னொரு கேரக்டருக்கு வேறொரு ஹீரோவ போட்டா அவரோட இமேஜுக்காக கதையில் சில காம்பரமைஸ்களை செய்ய வேண்டியது வரும். அதான் நானே ரெண்டு கேரக்டரையும் பண்றதுன்னு முடிவு பண்ணினேன்.

* வெங்கடேஷை இயக்குனரா எப்படி செலக்ட் பண்ணினீங்க?

கே.எஸ்.ரவிகுமாரும், ஏ.வெங்கடேசும்தான் என்னை வைத்து நிறைய படம் இயக்கி ஹிட் கொடுத்திருக்காங்க. ரெண்டு பேருமே என்னோட வேவ்லென்த்துக்கு சரியா இருப்பாங்க. ரவிகுமார் இப்போ சூப்பர் ஸ்டார் படத்தை பண்ணிக்கிட்டிருக்கார். அவரை தொந்தரவு செய்ய விரும்பல. அடுத்த சாய்ஸ் ஏ.வெங்கடேஷ். அவரும் நான் கற்பனையில வச்சிருந்த காட்சியை அப்படியே ஸ்கிரீன்ல கொண்டு வந்துகிட்டிருக்கார்.

* இரண்டு ஹீரோயின்கள் இருக்கிறார்களே...?

இரண்டு ஹீரோக்கள் இருக்கும்போது இரண்டு ஹீரோயின்கள் தேவைதானே... ஆட்டம் பாட்டு, ரொமான்சை விட இரண்டு பேருக்குமே நடிக்கிறதுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு.

* நிமிர்ந்து நில் படத்தில் நீங்க நடிச்சீங்க. உங்க படத்துல சமுத்திரகனி இது மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்தானே...?

அப்படியெல்லாம் இல்லை. சமுத்திரகனி எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் எங்க நிறுவனத்தில்தானே அவர் டி.வி.சீரியல் இயக்கினார். அவர் படத்துல ஒரு கேரக்டருக்கு நான் தேவைப்பட்டேன் நடிச்சார். இந்தப் படத்துல ஒரு பவர்புல் போலீஸ் ஆபீசர் கேரக்டருக்கு அவர் நடிச்சா பொருத்தமா இருக்கும்னு முடிவு பண்ணினோம். அவர் நடிக்கிறார் அவ்ளோதான்.

* எப்போதும் ஒரே மாதிரி இருக்கிறீர்களே இளமையின் ரகசியம்தான் என்ன?

இதுல ஒரு ரகசியமும் இல்லை. அளவான சாப்பாடு, கண்டிப்பான உடற்பயிற்சி. ரிலாக்சான மனநிலை. இந்த மூணையும் கரெக்டா வச்சிக்கிட்டா போதும். வயதுங்றது நாம வாழ்ற ஆண்டுகளின் கணக்குதானே தவிர அதை உடம்போடு இணைத்து பார்க்க வேண்டியதே இல்லை.

* நடிகர் சங்கத்தில் தொடர்ந்து பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கிறதே...?

நடிகர் சங்கம் ஒரு ஜனநாயக அமைப்பு. இதில் உறுப்பினராக உள்ள யார் வேண்டுமானாலும கேள்வி கேட்கலாம். பொறுப்புக்கு போட்டியிடலாம். அதனால் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அப்படி இருந்தால்தான் அது ஜனநாயக அமைப்பாகவும் இருக்க முடியும்.

* நடிகர் சங்க இடப்பிரச்னை....?

அது கோர்ட்டில் வழக்காக உள்ளது. அதுபற்றி நிறைய பேச முடியாது. குறுகிய காலத்திற்குள் எல்லாம் நல்லபடியாக முடிந்து எங்கள் கனவுகள் நனவாகும்.



No comments:

Post a Comment