நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர்
அபிநயா. தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். பூஜை, ரோமியோ ஜூலியட்
உள்பட சில தமிழ் படங்களிலும் நடிக்கிறார். இதுதவிர அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன்
நடிக்கும் போல்பச்சன் இந்திப் படத்திலும் நடிக்கிறார்.
இதற்கு அடுத்த கட்டமாக இந்தியாவில்
தயாராகும் பாசிபிலிட்டி இன் டிசாபிலிட்டி (முடியாதவர்களாலும் முடியும்) என்ற
ஆங்கில படத்தில் நடிக்கிறார். சர்வதேச படத் தயாரிப்பாளரும் இசை அமைப்பளருமான ரூபம்
சர்மா இயக்கி நடிக்கிறார்.
"இந்திய ஆங்கில படத்தில் நடிக்கிறேன். ரொம்ப சவாலான கேரக்டர். என்னை
நம்பி நடிக்க வைக்கும் இயக்குனருக்கு நன்றி சொல்கிறேன். மற்ற விபரங்கள் எதையும்
இப்போது தெரிவிக்க இயலாது" என்கிறார் அபிநயா.
இந்தப் படம் மாற்று திறனாளிகள் பற்றிய
படம். இதில் நிஜமாகவே மாற்றத் திறனாளியான அபிநயா அவரது கேரக்டரிலேயே நடிக்கிறார் என்கிறார்கள்.
அதாவது காது கேளாத வாய்பேச முடியாத அபிநயா எப்படி ஒரு திரைப்பட நட்சத்திரமாக
வளர்ந்தார் என்கிற கதையாம். இந்த படத்திற்கு பிறகு அபிநயாவின் புகழ் உலகம்
முழுவதும் பரவும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment