ஐ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த
பிறகு, அப்படத்தின் டிரைலரை டம்மியாய் ரெடி பண்ணினார் இயக்குநர் ஷங்கர்.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், ஐ டிரைலரை பார்க்க
விரும்பி இருக்கிறார். தயாரிப்பாளரில் விருப்பத்தை அறிந்து ஐ படத்தின் டிரைலரை
ஆஸ்கார் ரவிக்கு அனுப்பி வைத்தார் ஷங்கர்.
ஐ டிரைலரை பார்த்து மிரண்டுபோன
ஆஸ்கார் ரவி, உடனே தனக்கு நெருக்கமான நண்பர்கள் பலரையும் தன்னுடைய
அலுவலகத்துக்கு அழைத்து ஐ படத்தின் டிரைலரை போட்டுக்காட்டி இருக்கிறார். அதோடு, ஆர்வமிகுதியில் சில
பத்திரிகையாளர்களையும் அழைத்து அவர்களுக்கும் ஐ டிரைலரை காட்டி இருக்கிறார்.
அடுத்த கட்டமாக, ஃபேஸ்புக்கில் புழங்குகிற சிலரை அழைத்தும் ஐ டிரைலரை போட்டுக்காட்ட, அதில் யாரோ ஒருவர்
ஆஸ்கார் ரவிக்கு தெரியாமலே அதை செல்போனில் பதிவு செய்து அதை இணையதளத்தில்
பதிவேற்றம் செய்துவிட்டனர்.
திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட
டிரைலர் துல்லியமாக இல்லாவிட்டாலும், விக்ரம் பல தோற்றங்களில் வருவது அதில்
நன்றாகவே தெரிகிறது.
No comments:
Post a Comment