மாதவன் நடிக்கும் புதிய படத்தின்
பெயர் இறுதிச் சுற்று. இது தமிழ் மற்றும் இந்தியில் தயாராகிறது.
வாயை மூடி
பேசுவோம் படத்தை தயாரித்த வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம், ஒய் நாட் சசி, திருக்குமரன்
எண்டர்டெய்மெண்டின் சி.வி.குமார் ஆகியோர் இணைந்து இதனை தயாரிக்கிறார்கள்.
மணிரத்தினம் உதவியாளர் சுதா கொங்காரா இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கெனவே
ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்த துரோகி படத்தை இயக்கியவர்.
மாதவனுடன் ரித்திகா, நாசர் தவிர
இந்தியில் பிரபலமான நடிகர் நடிகைகளும் நடிக்கிறார்கள். தமிழ், இந்திக்கு
அறிமுகமான ஹீரோயினும் நடிக்க இருக்கிறார்கள். நடிகர்கள் தேர்வும், தொழில்நுட்ப
கலைஞர்கள் தேர்வும் நடந்து வருகிறது.

No comments:
Post a Comment