ஏ.ஆர்.முருகதாஸ்
இயக்கும் படங்களை மற்ற கம்பெனிகள் தயாரித்து வருகிறது. ஆனால் அவர் இன்னொரு பக்கம், பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் மூலம் தனது
உதவியாளர்களுக்கு படம் இயக்க வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் ஜெய்-அஞ்சலி
நடித்த எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான்கராத்தே
படங்களைத் தொடர்ந்து இப்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து
எண்றதுக்குள்ள என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் விக்ரம்-சமந்தா நடித்து
வருகின்றனர். இதையடுத்து, கடல் கெளதமை வைத்தும் அடுத்து ரங்கூன் என்றொரு படத்தை
தயாரிக்கிறார், முருகதாஸ். அந்த படத்தையும், அவரது உதவியாளர்களில் ஒருவரான
ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்குகிறாராம். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம்
அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் பணியாற்றியவராம்.
25 வயது இளைஞர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவத்தை
அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இந்த படத்திற்காக தனது கெட்டப்பையும்
மாற்றுகிறாராம் கெளதம். அதோடு,
தான் நடித்து வெளியான படங்கள்
தொடர்ந்து தோல்வியடைந்து வந்ததால் சோர்ந்து போயிருந்த கெளதம், முருகதாஸ்
தயாரிக்கும் எல்லா படங்களுமே ஹிட்டடித்து வருவதால், இநத ரங்கூன் படத்தில் அதிக
நம்பிக்கையுடன் கமிட்டாகியிருக்கிறாராம்.
No comments:
Post a Comment