மாமனாரின் பாராட்டில் தனுஷ்











3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களை தனது வொண்டர்பார் பட நிறுவனம் தயாரித்த தனுஷ். அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் காக்கி சட்டை, காக்கா முட்டை, ஷமிதாப், சூதாடி ஆகிய படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து மனைவி ஐஸவர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தையும் அவர் தயாரிக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், தனுஷின் இந்த வொண்டர்பார் நிறுவனத்திற்கு அவர் மட்டுமே தயாரிப்பாளர் இல்லையாம். அவரது அம்மா, மற்றும் அவரது மனைவி ஐஸவர்யா, மாமியார் லதா ரஜினி என மேலும் மூன்று பேர் இருக்கிறார்களாம். ஆக நான்கு பங்குதாரர்களுடன் படங்களை தயாரித்து வரும் தனுஷ், ஒவ்வொரு படத்திலும் லாப நஷ்டத்தையும் அவர்களுடன் ஷேர் பண்ணிக்கொள்கிறாராம்.

குறிப்பாக, இதுவரை தான் தயாரித்துள்ள எல்லா படங்களும் ஹிட்டாகியிருப்பதால், ஒவ்வொரு படத்திற்கும செலவு செய்தது போக மீதமுள்ள லாபத்தில் நான்கு பங்கு வைத்து மற்றவர்களுக்கும் ஒவ்வொரு பங்கு கொடுத்து விடுகிறாராம். இந்த விசயத்தை கேள்விப்பட்ட ரஜினி, பங்குதாரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினர் என்ற போதும் அவர்கள் கேட்காமலேயே லாபத்தை தனுஷ் பிரித்துக்கொடுப்பது ஆச்சர்யமாக உள்ளது என்று மருமகனை மெச்சி பாராட்டியுள்ளாராம். மாமனாரின் இந்த பாராட்டில் உச்சி குளிர்ந்து போயிருக்கிறாராம் சுள்ளான் தனுஷ்.


No comments:

Post a Comment